ஒமைக்ரான் வெறும் 2 மணி நேரத்தில் பரவுகிறது.‌.. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Dec 19, 2021 08:27 AM

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாயப் பரிசோதனையை தமிழ்நாட்டில் அனுமதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

omicron: TN requests centre to freshen up the norms

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதால் இந்திய அரசு சர்வதேச விமானப் பயணிகளுக்கு சமீபத்தில் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. தற்போது தமிழ்நாட்டுக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இதனால் தற்போது தமிழ்நாடு எல்லைக்குள் வரும் சர்வதேச பயணிகள் மட்டுமல்லாது வெளி மாநில பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ், தெர்மல் ஸ்கேனிங் ஆகிய நடைமுறைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் கடுமைபடுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இன்னும் கூடுதலான கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாடு வருவோருக்கு கட்டாய பரிசோதனை செய்ய மத்திய சுகாதரத்துறைக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயம் கடிதம் எழுதி உள்ளார். அதில், “வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 70 பேருக்கு கொரோனா உறிதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட ஒருத்தரிடம் இருந்து தொற்று மற்று ஒருவரும் வெறும் 2 மணி நேரத்திலேயே பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால், ஒமைக்ரான் பேரிடன் சூழல் உருவாகும் நிலை உள்ளது. தற்போதைய சூழலில் இங்கிலாந்து போன்ற ஒமைக்ரான் ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்கே கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளன. பாதிப்பு குறைவான நாடுகளில் இருந்து வருவோருக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை.

இதனால், ஒமைக்ரான் பரவும் அபாயம் இருக்கிறது. ஆக, எந்த வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்தாலும் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகளை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். மேலும், தொற்று இல்லை என்றாலும் எந்த வெளிநாட்டில் இருந்து வந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள பயணிகள் உட்படுத்த வேண்டும்.

8-வது நாள் மீண்டும் அவர்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அடதன் பின்னரே இயல்பு வாழ்க்கைக்குச் செல்லுமாறு கேட்க வேண்டும். தொற்று உறுதியானால் உடனடி சிகிச்சைகளை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #OMICRON #OMICRON IN TN #TN REQUEST TO CENTRE #OMICRON NORMS #ஒமைக்ரான் #வெளிநாட்டு பயணிகள் #மத்திய அரசு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Omicron: TN requests centre to freshen up the norms | Tamil Nadu News.