ஓமிக்ரானை 'ஃபேஸ்' பண்ண நாம 'ரெடியா' இருக்கணும்...! - எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்தியாவில் எது நடந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரான் வைரஸ் (பி.1.1.529) மீண்டும் பல நாடுகளில் சமூக பரவலாக மாறி வருகிறது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட சில வாரங்களிலேயே அதன் பரவல் மும்மடங்காக இருப்பதாகவும், டெல்டா வைரஸை விட பரவும் வீதம் அபரிவிதமாக இருக்கும். அதன் பாதிப்பு டெல்டா வைரஸ் போல இல்லை என மருத்துவ குழு கூறிவருகிறது.
தற்போது பிரிட்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்ட இந்தியா நாம் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளது. அதோடு, இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு 150-ஐ தாண்டியுள்ளது.
இதுக்குறித்து கூறிய எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர ரந்தீப் குலேரியா, 'இந்தியாவை பொறுத்தவரை ஓமிக்ரான் வைரஸ் குறித்த பரிசோதனைகளும், தரவுகளும் நமக்கு அதிகமாக தேவைப்படுகிறது. இப்போது நாம் பிரிட்டனை போன்று மோசமான நிலை ஏற்படாத வண்ணம் நாம் தயாராக வேண்டும்.
எப்போதெல்லாம் உலகின் ஒரு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் அவற்றை கண்காணிப்பது தேவையானது. அதன்பின் எது நிகழ்ந்தாலும் அதற்கு தயாராக வேண்டும். சிக்கிக் கொள்வதை விட தயாராக இருப்பது சிறந்தது' என எச்சரித்துள்ளார்.

மற்ற செய்திகள்
