ஓமிக்ரான் 'டெல்டா வைரஸ' விட ஆபத்தானதா...? - அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் போல இல்லையென அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரசாக பல நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து கண்டறியப்பட்ட சில வாரங்களில் பல உலகநாடுகளுக்கு பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலக்கட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஒமைக்ரான் வைரஸ் கொரோனாவின் உருமாறிய டெல்டா போல் அல்லாமல் சற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் டெல்டா வைரஸை விட அதிவேகமாக பரவும் தன்மையுடையது எனவும் கூறப்படுகிறது.
இதுவரை அமெரிக்காவில் வடகிழக்கு, தெற்கு, கிரேட் ப்ளைன்ஸ், வெஸ்ட் கோஸ்ட், விஸ்கான்சின், மிசோரி ஆகியவற்றிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனாவில் பாதி்க்கப்படுவோரில் 99 சதவீதம் பேர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது என்று அமெரிக்க மருத்துவஅதிகாரிகள் தெரிவி்க்கிறார்கள்.
இதுகுறித்து அமெரி்க்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியி்ல் கூறியபோது, 'ஒமைக்ரான் வைரசின் தீவிரத்தன்மை குறித்து முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.
அதோடு, ஆப்பிரிக்க மக்கள் அமெரி்க்காவுக்குள் நுழைய தடை இருப்பது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தமடைந்ததை அறிந்தோம். விரைவில் இந்த தடைகள் நீக்கப்படும் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
