ஓமிக்ரான் வைரஸ் 'இந்தியா'ல பரவ தொடங்குச்சுன்னா ஒரு நாளைக்கு... - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட மத்திய அரசு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவின் உருமாறிய வைரசான ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவினால் லட்சக்கணக்கான பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்றளவும் முடிந்தபாடில்லை. அதோடு கொரோனா வைரசில் வெவ்வேறு திரிபுகளாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே ஐரோப்பா நாடுகளுக்கு பரவி பீதி அடைய செய்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. அதோடு இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவினால் அதன் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட நிதி ஆயோக் (சுகாதாரத்துறை) உறுப்பினர் டாக்டர் விகே பால் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது 'தற்போது இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவும் கொரோனா அளவை கண்காணிக்கும் போது இந்தியாவில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் இருக்கும் நமது மக்கள்தொகையிடன் ஒப்பிடும்போது நாட்டில் தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். இங்கிலாந்தில் தற்போது கொரோனா வேகமாக பரவுவதற்கு ஓமிக்ரான் காரணமாக இருக்கலாம். ஆனால், இது அவசரமான மற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையாகும். தற்போது நிலவி வரும் அனைத்து சூழ்நிலைகளையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது' எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் பரவியுள்ள இந்த ஓமிக்ரான் வைரஸ் இதுவரை 113 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
