மீண்டும் இரவு நேர ‘ஊரடங்கு’ அமலுக்கு வருகிறதா..? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுவதால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு முதல் முறையாக ஓமிக்ரோன் தோற்று இருப்பது தொடர் கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து மகாராஷ்டிராவில் 11 பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் 3 பேருக்கும், தெலுங்கானாவில் 4 பேருக்கும் என இதுவரை ஓமிக்ரோன் தொற்று 200 தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 77 பேர் குணமடைந்திருப்பாதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓமிக்ரோன் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘டெல்டா வகை வைரஸை விட ஓமிக்ரோன் 3 மடங்கு வேகத்தில் பரவி வருகிறது. உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பான திட்டமிடல், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவில் தெளிவான கண்ணோட்டத்துடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான ‘வார்’ ரூம்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இரவு நேர ஊரடங்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது, திருமணங்கள் மற்றும் இறுதி சடங்கு போன்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான மக்கள் பங்கு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என ராஜேஷ் பூசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதா? என கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
