‘பிரபல ஆஃப்கான் கிரிக்கெட் வீரர் விளையாட 1 வருடம் தடை’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 11, 2019 11:11 AM
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்டப் அலமிற்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி, விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் லீக் சுற்றை விட்டு வெளியேறியது. ஆனாலும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட முன்னணி அணிகளை உலகக்கோப்பை லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி திணறடித்தது.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் அஃப்டப் அலமிற்கு ஒழுங்கீன நடவடிக்கையில் அடிப்படையில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் தோல்வியைத் தழுவியது. அப்போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி அலமிற்கு இரு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அலமிற்கு 1 வரும் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.