‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க’!.. கப்பாவுக்கு வந்தே ‘கப்’பை அடிச்சிட்டோம்.. ஆஸ்திரேலிய கேப்டனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை குறிக்கும் வகையில் உள்ள வடிவேல் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இன்று பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதனாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி இதற்குமுன் வென்றது இல்லை.
விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல், ரஹானே தலைமையில் இந்திய அணியின் ‘இளம்படை’ ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி வம்பு இழுத்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், இந்திய வீரர்களான ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோர் பேட்டிங் செய்யும்போது அளவுக்கு அதிகமாக ஸ்டெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
இதில் சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அவரைப் பார்த்து, ‘கப்பாவுக்கு (மைதானம்) வா உன்னை பார்த்துக்கொள்கிறேன்’ என ஆணவத்துடன் கூறினார். அதற்கு, 'நீ இந்தியாவுக்கு விளையாட வந்தால், அதுதான் உனது கடைசி போட்டியாக இருக்கும்’ என அஸ்வின் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் டிம் பெய்ன் அழைத்த கப்பா மைதானத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்று அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. ரோஹித், ஷர்மா மற்றும் புஜாரா போன்ற முன்னணி வீரர்களை தவிர முழுக்க முழுக்க இளம்வீரர்களை கொண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரஹானேவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆஸ்திரேலிய அணியை கிண்டல் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக நடிகர் வடிவேல் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி நடித்த ‘என் ஏரியாவுக்கு வந்திடாதே, அங்க நான் உக்கிரமா இருப்பேன்’ என வரும் காமெடி காட்சியை டிம் பெய்னுக்கு பொருந்தும்படி மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
#AUSvsIND #TimPaine 😂😂😂 pic.twitter.com/hrJIYDGfdJ
— Ranjith Kumar (தர்மதுரை) (@ranjibhai) January 19, 2021
Entha maari veara maari pic.twitter.com/PC1Ve8GrWl
— Nabil Bin Hameed (@NabilBinHameed1) January 19, 2021