பிங்க் கலராக மாறிய ஏரி...! 'அய்யோ... நாற்றம் குடல புரட்டுது...' ஏன் 'இப்படி' ஆச்சுன்னா...? - தெரிய வந்துள்ள 'அதிர' வைக்கும் உண்மை...!
முகப்பு > செய்திகள் > உலகம்அர்ஜென்டினாவில் உள்ள ஒரு ஏரி முழுவதும் ரசாயன கழிவுகள் கலப்பதன் மூலமாக அடர்நிற பிங்க் நிறத்துக்கு மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் தென் பகுதியான படாகோனியா பகுதியில் இருக்கும் உப்புநீர் ஏரியில், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் ரசாயன கழிவுகள், சுற்றுப்புற மாசுகள் கலப்பதால் அடர்நிற பிங்க் நிறத்துக்கு மாறியுள்ளது.
இந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்களிடையேயும், சுற்றுச்சூழல் நிபுணர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோடியம் சல்ஃபைட் என்ற ரசாயனம் தண்ணீரில் கலந்தால் இம்மாதிரி அடர் பிங்க் நிறத்தில் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இந்த ரசாயனம் பெரும்பாலும் மீன் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுவதற்காகவும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும். அதோடு, அப்பகுதியில் இருக்கும் மீன் தொழிற்ச்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழுவுகள் காரணமாக தான் மாசு ஏற்பட்டு நீரின் நிறம் மாறியுள்ளது.
ஏரியின் நிறம் மாறியது மட்டுமல்லாமல், மோசமாக துர்நாற்றம் வீசியதாகவும் அப்பகுதி மக்கள் ஊடகங்களில் கூறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் நிபுணரும் வைராலஜிஸ்டுமான ஃபெடிரிக்கோ என்பவர் பிரான்ஸ் ஊடக நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், 'மீன் தொழிற்சாலைகளின் கழிவுகளிலுள்ள சோடியம் சல்ஃபைட் தான் ஏரியன் இந்த நிறமாற்றத்துக்கு காரணம்' எனக் கூறியுள்ளார்.
மீன் தொழிற்சாலையிலிருந்து பல ட்ரக்குகளில் குப்பைகளை கொட்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அப்பகுதி மக்கள் சுமார் 60,000 பேராவது அந்த தொழிற்சாலையில் வேலைபார்ப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு பிரதான வேலைவாய்ப்புக்கான பகுதியாக அந்த தொழிற்சாலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.