ஒரே கட்டமாகத் தேர்தல்.. தேர்தல் பணிச்சுமையால் நிகழ்ந்த சோகம்.. 272 தேர்தல் அலுவலர்கள் பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 29, 2019 03:49 PM

இந்தோனேசியாவில் அதிபர் பதவி, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய பணிச்சுமையால் 272 அரசு பணியாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

272 die counting votes by hand in indonesia after elections

இந்தோனேசியா நாட்டில் தேர்தலுக்காக செய்யப்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில், அந்நாட்டின் அதிபர் பதவி, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 17-ம் தேதியன்று ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது. சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில், முதல்முறையாக 3 தேர்தல்களும் ஒருசேர நடத்தப்பட்டன.

வாக்களிக்கும் உரிமை கொண்ட 19.3 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் இந்த தேர்தல்களில் வாக்களித்தனர். ஆனால், இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரையிலான சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 லட்சம் வாக்குச்சவடிகளில் தலா ஐந்து முறை ஒவ்வொரு வாக்காளரும் வாக்குகளை பதிவிட்டனர்.  வாக்குச்சீட்டு முறையில் போடப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவது அவ்வளவு எளிதான பணியாக அமைந்து விடவில்லை.

கைகளால் வாக்குச்சீட்டுகளை எண்ணி, எண்ணி தேர்தல் அலுவலர்கள் சோர்வடைந்தனர். தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தேர்தல்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஞாயிறன்று இரவ வரை 272 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஆரிப் பிரியோ சுசான்ட்டோ தெரிவித்தார்.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஓராண்டு சம்பளத்துக்கு நிகரான பணத்தை, இழப்பீடாக அளிக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இன்னும் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தேர்தல்களின் முடிவு மே மாதம் 22-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags : #INDONESIA #INDONESIAELECTION #OVERWORK