பேக் சைடு கதவ ஒடச்சுருக்காங்க...! 'அப்பாவுக்கு இறுதிச்சடங்கு முடிச்சுட்டு வரதுக்குள்ள...' - வீட்ல காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த தொழிலதிபரின் வீட்டை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை அடுத்த இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூவில் வசித்து வருபவர் தொழிலதிபர் பொர்கோ, இவர் டயர் விற்பனையகம், கேஸ் ஏஜென்ஸி போன்றவை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது தந்தை இறந்ததினால், இறுதி சடங்குகள் செய்வதற்காக மனைவி, இரு மகள்களுடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்.
கதவை பூட்டிவிட்டி சென்றவர்களுக்கு அதிகாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே உள்ளே சென்று பார்த்த போது அறைக்குள் வைத்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்திற்கு பொற்கோ அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
