உலகின் காஸ்ட்லியான தலையணை.. இவ்வளவு லட்சமா? அப்படி என்ன இருக்கு ஸ்பெஷலா?
முகப்பு > செய்திகள் > உலகம்15 வருட கடின உழைப்பின் பலனாக உலகின் மிகவும் விலை உயர்ந்த தலையணையை கண்டுபிடித்துள்ளார் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர்.
Also Read | மெஹந்தி விழாவில் நடனமாடிய போது நெஞ்சை பிடிச்சிட்டு உக்காந்த நபர்.. திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்..!
செல்வம், புகழ், செல்வாக்கு ஆகியவை இருந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக இருக்கிறது. வேலைப்பளு, அலைச்சல்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் நிம்மதியாக ஒரு தூக்கம் வேண்டும் என நினைக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி நிம்மதியாக தூங்குவதற்காகவே நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் வித்தியாசமான தலையணை ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்.
ஆய்வு
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Thijs van der Hilst என்னும் மருத்துவர் கடந்த 15 வருடங்களாக இது குறித்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். தன்னிடம் வரும் மக்கள் தாங்கள் சந்திக்கும் தூக்கிமின்மை குறித்து கூறிய விஷயங்களை பகுப்பாய்வு செய்து, அவற்றிற்கு காரணம் தலையணை தான் என கண்டுபிடித்ததாக சொல்கிறார் இந்த மருத்துவர். இதனையடுத்து நிம்மதியாக தூங்குவதற்காக தலையணை ஒன்றை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர்,"ஒரு கர்ப்பப்பை வாய் நிபுணராக, நான் என் நோயாளிகளை நல்ல தலையணைகளை வாங்கி உபயோகிக்கும்படி வலியுறுத்துகிறேன். ஆனால் எந்த நோயாளிக்கு சரியான தலையணை எது? மூன்று அளவிலான தலையணைகள் இருந்தால், எது மிகவும் பொருத்தமானது? சிறிய கழுத்து கொண்டவர்கள் கடினமான தலையணையில் உறங்கினால் என்ன ஆகும்? என பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதன்பிறகு, ஒவ்வொரு நபருக்கும் ஒரு தலையணையின் சரியான அளவு மற்றும் வடிவத்தை கணக்கிடுவதற்கு நான் ஒரு வழிமுறையை உருவாக்கினேன்" என்றார்.
உருவாக்கம்
மனிதர்கள் தூங்கும் விதம், தலையணையில் தரப்படும் அழுத்தம் போன்ற தரவுகளை சேகரித்து அதற்கு தகுந்தபடி தலையணையை வடிவமைக்க திட்டமிட்டிருக்கிறார் இவர். அதுமட்டும் அல்லாமல் இந்த தலையணையில் நீலக்கற்கள், தங்கம், வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது. 3டி ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், கணித அல்காரிதம், மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 காரட் தங்க துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி பல வசதிகளை கொண்டிருக்கும் இந்த தலையணையின் விலை 57,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய்.
தங்கத்தினால் ஆன துணியை பயன்படுத்துவதால், மின்காந்த ரேடியோ அலைகளை இவை தடுத்து நிம்மதியான தூக்கத்தை தரும் என்கிறார் இந்த மருத்துவர். தற்போது சொகுசு ஹோட்டல்கள் சிலவற்றில் இந்த தலையணை பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.