எகிறிய ஹார்ட் பீட்.. ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெண்ணுக்கு தெரிய வந்த "இனிப்பான" செய்தி.!!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Ajith Kumar V | Oct 11, 2022 12:42 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களிலும் மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேட்ஜட்கள் மிகப் பெரிய அங்கம் வகித்து வருகிறது.

Woman found pregnancy after increase heart beat rate in smartwatch

Also Read | "இனி பெண்களும் தைரியமா நைட்ல வெளில வருவாங்க".. கேரள MLA போட்ட ஒரு ஆர்டர்.. களைகட்டிய கடவுளின் தேசம்..!

அது மட்டுமில்லாமல், இப்படிப்பட்ட பொருட்கள் இல்லாமல் பலராலும் அந்த நாளையே கடந்து முடியாத அளவிற்கு முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அதே போல, இதில் உள்ள பல அப்டேட்கள் கூட ஒருவித பிரம்மிப்பை தான் உருவாக்கவும் செய்கிறது.

உதாரணத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது ரத்த ஓட்டம், தூங்கும் நேர அளவு உள்ளிட்ட பல விஷயங்களை துல்லியமாக கணக்கிட்டு சொல்லவும் முடியும்.

அந்த வகையில், ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெண் ஒருவருக்கு தெரிய வந்த விஷயம் தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. 34 வயது பெண் ஒருவர் Reddit தளத்தில் தான் பயன்படுத்தும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மூலம் தனக்கு தெரிந்த விஷயத்தை குறித்து கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் பகிர்ந்த பதிவின் படி, கடந்த இரண்டு வாரங்களாக அந்த பெண்ணிற்கு இதயத்துடிப்பு வழக்கத்திற்கும் மாறாக கூடுதலாக இருந்ததை ஆப்பிள் வாட்ச் சொல்லி அறிந்து கொண்டுள்ளார். முறையான உடற்பயிற்சி மற்றும் சிறந்த உணவு பழக்க முறையை கடைபிடித்து வரும் அவர், காரணம் இல்லாமல் இதயத் துடிப்பு அதிகரிப்பதால் குழம்பி போயுள்ளார்.

தொடர்ந்து, கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சத்தில், பரிசோதனை மேற்கொண்டுள்ளார் அந்த பெண். ஆனால், நெகட்டிவ் என்றும் முடிவுகள் வந்துள்ளது. பின்னர் இணையத்தில் இதய துடிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து தேடிய போது, கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் பெண்களுக்கு இதய துடிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், மருத்துவரிடம் சென்று அவர் பரிசோதித்த போது அவர் 4 வார காலம் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான விஷயங்கள் ஒரு சிலருக்கு தெரிந்தாலும், ஸ்மார்ட் வாட்ச் மூலம் தனக்கு தெரிய வந்த இந்த விஷயம் வியப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவு இணையத்தில் அதிகம் கவனம் பெற்று வரும் நிலையில் பலரும் பல விதமான கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | 5 வருசமா காதலிச்சிட்டு வந்த ஜோடி.. "கடைசியா காதலன் சொன்ன விஷயத்த கேட்டு உடைந்த இளம்பெண்.. துயரம்!!

Tags : #WOMAN #SMARTWATCH #PREGNANCY #HEART BEAT RATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman found pregnancy after increase heart beat rate in smartwatch | Technology News.