ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி பதவி விலக 3 காரணங்கள்… அதுல நம்ம பரக் அக்ரவலும் காரணம்.. பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ட்விட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியை விட்டு விலக புதிய சிஇஓ ஆகப் பதவி ஏற்றுள்ள பரக் அக்ரவலும் ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் சிஇஓ ஆக நேற்று ஜாக் டோர்சி பதவி விலக இந்தியர் ஆன பரக் அக்ரவல் புதிய சிஇஓ ஆகப் பதவி ஏற்றுக்கொண்டார். ட்விட்டர் நிறுவனத்தின் பெரும் வரவேற்புக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தவர் பரக் என ஜாக் டோர்சி புகழ்ந்து உள்ளார்.
பரக் வெளிப்படுத்திய திறனின் காரணமாகவே தான் பதவி விலகுவதற்கான காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தது ஆக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ஜாக் டோர்சி கூறுகையில், “கடந்த சில நாட்களாகவே ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ ஆக பரக் தான் என யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். ஏனென்றால் எங்கள் நிறுவனம் குறித்த மிகச்சிறந்த புரிதல் பரக்-கிடம் உள்ளது. மிகவும் ஆர்வமானவர், கற்றுக்கொள்பவர், கற்பனை வளம் கொண்டவர், என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து செய்பவர் மற்றும் அடக்கமானவர்.
ட்விட்டர் நிறுவனத்தை தன் இதயம் மற்றும் ஆன்மாவைக் கொண்டு வழி நடத்துவார். அவரிடம் இருந்து நான் தினமும் கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் படித்த பரக் ஒரு பொறியாளர் ஆகத் தான் வேலையில் சேர்ந்தார். எங்கள் வேலை குறித்து தீவிர அக்கறைக் கொண்டவர் இன்று நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.