'இந்தியாவில் GOOGLE SEARCH-ல் தேடப்பட்ட டாப் விஷயம்...' - அதுக்காக தானே மக்கள் ஒவ்வொரு நாளும் காத்திட்டு இருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த வருடம் டிசம்பர் முதல் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த பல மாதங்களாக உலகமே தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்துவிட்டது எனலாம்.

இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலோடு எந்த ஒரு அங்கரிக்கப்பட்ட மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்புக்களில் முதலிடம் பிடிப்பது, ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான். இதற்கு காரணம் ரஷ்ய அதிபர் தன்னுடைய மக்களுக்கே இதனை பரிசோதித்துள்ளார் என்னும் செய்தி வெளியானதாகக்கூட இருக்கலாம்.
மேலும் கொரோனா தடுப்பூசியை அடுத்து, இந்திய சுதந்திர தினம் குறித்த செய்திகளும், அதையடுத்து அமித் ஷாவுக்கு கொரோனா இருப்பது உண்மையா?, ஜியோ மொபைல் சேவையில் காலர் டியூனாக வரும் கொரோனா அறிவிப்பை நிறுத்துவது எப்படி?, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா குணமாகி விட்டதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள், இந்தியாவில் உருவாக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகளும், பயன்பாட்டுக்கு வரும் விவரங்களும் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்
