முக்கியமா 'அவங்களுக்கு' இது ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்...! 'வியக்க வைக்கும் டெக்னாலஜி...' - அதிரடி தகவலை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆப்பிள் நிறுவனம் புதுவித ஸ்மார்ட் வாட்சுகளை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் தற்போது ஸ்மார்ட் வாட்ச் அணிவது வழக்கமாகியுள்ளது. பொதுவாக மணி பார்க்க மட்டும் பயன்படுத்தப்படும் வாட்ச்கள் தற்போது உடற்பயிற்சி அளவிடவும், வாக்கிங் மற்றும் இதய துடிப்பு கண்காணிக்க போன்றவற்றிற்கும், ஒரு படி மேலே சென்று ஸ்மார்ட் போனில் உபயோகமும் உள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் புதுவித ஸ்மார்ட் வாட்சுகளை தயாரிக்க உள்ளதாகவும், இதில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, மது அருந்தியிருந்தால் ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு உள்ளிட்டவற்றை அறியவும் தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்த உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது
மேலும், இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் (Rockley Photonics) என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த வாட்சில் ரத்த அழுத்தத்தை கண்டறியும் தொழில்நுட்ப சென்சார்களும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இம்மாதிரியான வாட்ச்கள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் மது அருந்துவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றாலும், இதன் விலையை பார்த்து ஹார்ட் அட்டாக் வராமல் இருந்தால் போதும் என வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.