'கொல்கத்தா' அணியைத் தொடர்ந்து.. 'சிஎஸ்கே'வுக்கு வந்த 'சிக்கல்'??.. 'ஐபிஎல்' வட்டாரத்தில் 'பரபரப்பு'!! என்னதான்’யா நடக்குது??
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், கொல்கத்தா அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இன்று நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர், கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக, இன்றைய போட்டி தள்ளிப் போயுள்ள நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிலுள்ள 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில், அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரித்து வரும் கிளீனர் ஆகிய மூன்று பேருக்கும் தொற்று உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஏற்கனவே, கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இன்று நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது, ஐபிஎல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.