'ஐபோன் லோகோவில் இருந்த பிழை'... 'தப்பா இருந்தாலும் விலை மட்டும் இத்தனை லட்சமா'?... வெளியான சுவாரசிய தகவல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ குறித்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தற்போது ஸ்மார்ட்போன்களின் வரவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இருக்கும் மவுசு மட்டும் இன்னும் குறையவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஐபோனின் செயல்திறன், டிசைன் மற்றும் அதன் கேமரா எனப் பல அம்சங்கள் உள்ளன.
ஆப்பிள் ஐபோன்கள் மிகவும் கடுமையான மற்றும் முழுமையான தயாரிப்பு உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்பது அதன் கூடுதல் பலமாகும். இருப்பினும் சில நேரங்களில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பிலும் சிறிய தவறுகள் ஏற்படுகிறது, ஆனால் இது அரிதானது. அதாவது சுமார் ஒரு மில்லியனில் ஒரு ஐபோனில் இத்தகைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தவறு ஆப்பிள் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக அதிக விலைக்கே அந்த போன் விற்கப்பட்டுள்ளது. தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்டர்னல் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஐபோன் லோகோ போனின் பின்புறத்தில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. வழக்கமாக, ஆப்பிள் லோகோ போனின் மையத்தில் இருக்கும். ஆனால் இந்த போனில் லோகோ வலதுபுறத்தில் சற்று தள்ளி அமைந்துள்ளது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சரியாக அதனைக் கவனித்தால் குறைபாட்டைக் காண முடியும். இந்த ஐபோன் எங்கே வாங்கப்பட்டது அல்லது படங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. புகைப்படங்கள் உண்மையில் உண்மையானவை என்றால், இது ஒரு தயாரிப்பு பகுதியில் நடந்த தவறாக இருக்கலாம்.
இந்த தவறு பெரும்பாலும் அடிக்கடி ஏற்படாது, ஆம், டிசைனில் பிழை உள்ள ஐபோன் மிகவும் அரிதானது, இதனை நன்கு கவனித்தால் லோகோ செங்குத்தாக இருப்பதை கவனிக்க முடியும். ஆனால் இதுபோன்ற தவறுகள் முதல் முறையாக நடக்கவில்லை. கடந்த 2015ம் ஆண்டில், ஒரு யூசர் ஐபாட் புரோ வாங்கிய நிலையில், அது தனித்துவமான வண்ண கலவையுடன் கிடைத்தது, அதாவது முன் பக்கத்தில் தங்க நிறத்திலும், பின்பக்கத்தில் வெள்ளி நிறத்திலும் இருந்தது.
இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்த பல்வேறு வதந்திகள் தற்போதே வலம் வர ஆரம்பித்துள்ளது.