‘டேய் ஜியோ ஏர்டெல் காரன் கூட சேர்ந்திட்டியா..?’- கலாய்த்த வாடிக்கையாளருக்கு ஏர்டெல் கொடுத்த ‘பஞ்ச்’ ரிப்ளை..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Rahini Aathma Vendi M | Dec 21, 2021 07:05 PM

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க் ரீச் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் ஒப்பிட்டு பேச அதற்கு ஏர்டெல் நிறுவனமே ‘பஞ்ச்’ உடன் பதிலும் கொடுத்துள்ளது.

Airtel cares gives a funny reply to a customer

ஜியோ நெட்வொர்க் சமீப காலமாக அடிக்கடி தொய்வடைவதாக வாடிக்கையாளர்கள் சமுக வலைதளங்களில் புகார் செய்து வருகின்றனர். நெட்வொர்க் கவரேஜ் இல்லை, இணைய சேவை மெதுவாக உள்ளது என அடிக்கடி பிரச்னைகள் எழுந்து வருவதாக சமுக வலைதளங்களில் ஜியோ நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் கேலி செய்து வருகின்றனர்.

Airtel cares gives a funny reply to a customer

தற்போது ஏர்டெல் உடன் ஜியோ நிறுவனத்தை ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். ட்விட்டர்வாசி ஒருவர், “ஜியோ, நல்லாத்தான டா இருந்த சின்னவனே… ஏர்டெல்’க்காரனோட எதும்சேந்து தொலச்சுட்டியா டா… நாலஞ்சு நாளா இந்த சுத்து சுத்துற…” என கேலி ஆக ஒரு ட்வீட் பதிவு செய்ய அதற்கு ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்தே பதிலும் வந்துள்ளது.

Airtel cares gives a funny reply to a customer

ஏர்டெல் கேர்ஸ் அந்த வாடிக்கையாளருக்கு ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளது. அந்த ட்வீட்டில், “நாம யார் வம்புக்கும் போறது இல்ல யார் தும்புக்கும் போறது இல்ல… நாம உண்டு நம்ம சோலி உண்டுனு போயிட்றது:) பின் குறிப்பு: நீங்கள் மறுபடியும் எங்களிடம் திரும்பி வர சந்தோஷத்துடன் வரவேற்கிறோம். இந்த முறை உங்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும் என உறுதி அளிக்கிறோம்” என அதே கேலி, கிண்டலுன் ‘பஞ்ச்’ ஆக பதில் ட்வீட் செய்துள்ளது.

Airtel cares gives a funny reply to a customer

இதற்கு இன்னும் பல ட்விட்டர்வாசிகளும் லைக் செய்து வருகின்றனர். இன்னும் சிலர், ‘ஏர்டெல் கேர் அட்மின் மதுரைக்காரன் போல…’ என்று எல்லாம் கலாய்த்து வருகின்றனர்.

Tags : #JIO #AIRTEL #AIRTEL CARES #ஏர்டெல் #ஜியோ

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Airtel cares gives a funny reply to a customer | Technology News.