'இளைஞர் கழுத்தறுத்து கொலை...' மோப்ப நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா...? அங்கிருந்து துப்பு துலக்கல் தொடக்கம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எண்ணூரை சேர்ந்த இளைஞர் கூடுவாஞ்சேரி தண்டவாளப்பகுதி அருகிலிருக்கும் மைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே தண்டவாளம் அருகில் இருக்கும் காலி மைதானத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, பல்வேறு வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் சென்னை எண்ணூரை சேர்ந்த ரமேஷ்(34) எனவும், அவர் மீது 23 வழக்குகள் உள்ளது என்றும் தெரிய வந்தது. மேலும் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கொலை நடந்த மைதானத்தை ஓட்டி 3 மதுபான கடைகள் இருப்பதால் இறந்த வாலிபரை மதுபோதையில் யாரேனும் கொலை செய்தார்களா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரமேஷ் கூடுவாஞ்சேரி தைலாவரம் அம்பேத்கர் நகர் தெருவில் அவரது 3 நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். போலீசார் மோப்பநாய்களை வரவழைக்கப்பட்டதில், நாய் நேராக ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றது. ஆனால் ரமேஷின் நண்பர்கள் அங்கு இல்லை வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது.
தற்போது வழக்கு உடனிருந்த நண்பர்களே ரமேஷை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு, மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
