'ரயில்நிலையம்' மற்றும் வளாகங்களில் '136'... 'ஓடும் ரயிலில் 29'.... 'மொத்தம் 165'... பெண்களுக்கான தேசத்தில் நிகழ்ந்த 'அவலங்கள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 02, 2020 12:46 PM

கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

women molested in three years at Railway Stations

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரெயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் வன்கொடுமை அல்லாமல் பெண்களுக்கு எதிராக ரயில் நிலையங்களில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 802 வழக்குகளும், ஓடும் ரெயிலில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 871 வழக்குகளும்  என மொத்தம் 1672 பதிவாகி உள்ளது.

அதேபோன்று கடந்த 3 ஆண்டுகளில் 771 கடத்தல் வழக்குகளும், 4,718 வழிப்பறி வழக்குகளும், 213 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளது. ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்கள் என மொத்தம் 542 கொலைகள் நடந்து உள்ளது.

Tags : #WOMAN MOLASTED #RAILWAYSTATION #RTI ACT