சீக்கிரமே 'அப்பாவாக' போறேன்... புகைப்படம் வெளியிட்ட 'இளம்வீரர்'... போட்டிபோட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம்வீரர் ஹர்திக் பாண்டியா தான் அப்பாவாக போவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் தாங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ஹர்திக் அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது தான் அப்பாவாக போவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நடாஷாவும் நானும் சேர்ந்து சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்க்கையின் புதிய பரிமானத்துக்கு செல்ல ஆச்சரியத்துடன் காத்திருக்கிறோம்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.
ஹர்திக்கின் இந்த போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் ஹர்திக்-நடாஷா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
