'ஐந்தில் ஒருவருக்கு கொரோனா'... 'சென்னையில் இன்னும்'... 'எத்தனை பேர் பாதிப்படைய வாய்ப்பு?'.. 'வெளியாகியுள்ள ஷாக் ரிப்போர்ட்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மக்களிடம் நடத்தப்பட்ட செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி என்ற ஆய்வின் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களில் சிலருடைய ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியும் முறை `செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி' (Seroprevalence Study) என அழைக்கப்படுகிறது. சென்னையில் வசிக்கும் சுமார் 12,000 மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜூலை மாதம் வரை 21.5 சதவிகிதம் பேருக்கு கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள் உடலில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் ஐந்தில் ஒருவர் ஏற்கெனவே கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
அதாவது சென்னையில் 21.5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதால், மீதமுள்ள 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா வருவதற்காக சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தண்டையார்பேட்டையில் மிக அதிகமாக 44.2 சதவிகிதம் பேருக்கு கொரோனா வந்து சென்றுள்ளதும், ராயபுரத்தில் 34.4%, திருவொற்றியூரில் 31.6%, தேனாம்பேட்டையில் 29.4%, அண்ணா நகரில் 25.2%, ஆலந்தூரில் 11.1%, சோழிங்கநல்லூரில் 10.3% பேருக்கும், குறைந்தபட்சமாக பெருங்குடியில் 7.3%, மாதவரத்தில் 7.1 % பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது இந்த செரோ ஸ்டடியின் முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.