ஸ்கூட்டி நம்பர் பிளேட்டில் இருந்த 'அந்த' வார்த்தை...! 'எல்லாரும் கிண்டல் பண்றாங்க...' வெளிய தலை காட்ட முடியல...' - இப்படியெல்லாமா சோதனை வரும்...?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியை சேர்ந்த ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை தீபாவளி பரிசாக பைக் வாங்கிக்கொடுத்துள்ளார்.
இனி பேருந்தில் செல்லாமல் கல்லூரிக்கு வீட்டில் இருந்து ஜாலியாக போகலாம் என எண்ணிய மாணவிக்கு புதிய வடிவில் சோதனை காத்திருந்தது. அவரது வண்டியின் நம்பர் பிளேட் தான் அதற்கு காரணம்.
வீட்டின் அருகில் உள்ளவர்களின் கிண்டலால் வீட்டு வாசலை தாண்டி செல்ல முடியவில்லை. தனக்கு இந்த வண்டியே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார். அப்படி அந்த நம்பர் பிளேட்டில் என்னதான் எழுதி இருந்தது என்றால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்பட்ட நம்பர் பிளேட்டில் SEX என்று குறிக்கப்பட்ட ஆங்கில வார்த்தைதான் இத்தனை களேபரத்திற்கு காரணம்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்கள் மற்றும் வாகன வகைகளின் அடிப்படையில் ரெஜிஸ்டர் நம்பர் வழங்கப்படுகிறது. டெல்லியில் பதிவு செய்யப்படும் வாகனத்தில் முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கும் விதமாக இருக்கும். பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும் விதமாக இருக்கும்.
அதற்கு பிறகு வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்று இருந்தால் அது காரையும் S என்று காணப்பட்டால் பைக்கையும் குறிக்கும். இப்போது டெல்லியில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்யும்போது பைக்கை குறிக்கும் S என்ற எழுத்தும் இப்போது நடைமுறையில் இருக்கும் சீரிஸான EX பதிவு செய்யப்படுகிறது. எனவே அந்தப்பெண்ணுக்கு DL 3 SEX என்ற ரெஜிஸ்டர் நம்பர் கிடைத்துள்ளது.
அவர் நொய்டாவில் இருக்கும் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்துள்ளார். ஒருமாதம் தனது அப்பாவிடம் சண்டை போட்டு ஒருவழியாக இந்த ஸ்கூட்டியை வாங்கியுள்ளார். இப்படி ஒரு நிலை தனக்கு உருவாகும் என அந்த மாணவி கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
அண்டை வீட்டில் வசிப்பவர்கள் இந்த நம்பர் ப்ளேட்டை மனம் நோகும் அளவிற்கு கிண்டல் செய்கின்றனர். வார்த்தைகளால் துன்புருதுகின்ற்றனர் என அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்கவலைப்பட கூறியுள்ளார்.
அவரது அப்பா வண்டியை வாங்கிய டீலரிடம் போய் நம்பர் பிளேட்டை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். டெல்லியில பல வண்டியில இந்த எழுத்துதான் இருக்கு. நம்பர் ஆன்லைன்ல வந்ததால இதனை மாற்ற வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய டெல்லி போக்குவரத்து ஆணையர், ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட பதிவெண்ணை மாற்ற முடியாது என்றும் பதிவெண் வழங்குவதில் வரிசை எண் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.