'2 தடுப்பூசிகளை கலந்து போட்ட நாடுகள்'... 'இது என்ன விளையாட்டு காரியமா'?... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பணக்கார நாடுகளிடம் தேவைக்கு அதிகமாக உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

கொரோனா 2ம் அலையின் தாக்கம் பல நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், 3ம் அலை குறித்த அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளைப் போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு 2 ஊசிகளைக் கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், ''கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.
தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். முறையாகச் சோதனைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே 2 ஊசிகளைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என சவும்யா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்குப் பதிலாகப் பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாகக் குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்குத் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
