‘நாட்டோட பெயரை சொல்லக்கூடாது’!.. உருமாறிய கொரோனாவுக்கு ‘புதிய’ பெயர்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉருமாறிய கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை வைத்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் B.1.617 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்த மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார அமைப்பு கிரெக்க எழுத்துக்களை புதிய பெயர்களை அறிவித்துள்ளது
அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரஸுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது. இதேபோல், பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு ஆல்பா என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பீட்டா என்றும், பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு காமா என்றும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எப்சிலான் என்றும் உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
