‘கொரோனா வைரஸால்’... ‘நாம வேணா சோர்வாகி இருக்கலாம்’... ‘ஆனா, அது’... ‘வறுமை, பசிக்கு எல்லாம்’... 'உலக சுகாதார நிறுவனத் தலைவர் வேதனை’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்நாம் வேண்டுமென்றால் கொரோனா வைரஸ் உடன் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் அது நம்மிடம் சோர்வாக இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானாம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு, நேற்று நடந்த உலக சுகாதார அமைப்பின் முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது டெட்ராஸ் அதானாம் கூறியதாவது, ‘நாம் கொரோனா வைரஸ் உடன் சோர்வடைந்து இருக்கலாம். ஆனால் அது நம்மிடம் சோர்வாக இல்லை. கொரோனா தம்மை விட பலவீனமானவர்களை வேட்டையாடுகிறது. ஆனால் இது மற்ற பிரிவுகளையும் பாதிக்கிறது. அதாவது வறுமை, பசி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றையும் பாதிக்கிறது. இதற்கெல்லாம் தடுப்பூசி எதுவும் இல்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
