'முன்னாடி மாதிரியும் பரவுது...' அதே நேரத்துல 'இப்படியும்' கொரோனா வைரஸ் பரவுறதா கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க...! - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவும் விதம் குறித்து உலக சுகாதார அமைப்பு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை முதல் அலையை விட தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகள் இந்தியாவில் கையறு நிலை குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனா வைரஸிற்கு சரியான மருத்துவம் கண்டுபிடிக்க முடியாததால், நோயாளியின் உடலில் பரவிய கொரோனாவை குணப்படுத்தவில்லை.
அதற்கு பதிலாக நோய் தொற்று பரவியவரின், அறிகுறிகளை வைத்து அதனைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு நோயாளிக்கு தான் எப்படி வைரசை பரப்புகிறோம் என்பது தெரிவதில்லை.
கடந்த வருடம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த வழிக்காட்டுதலில் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாகவும், மேலும் இருமல் மற்றும் தும்மலின் போது தெறித்து விழும் நீர்த்துளிகளால் வைரஸ் பரவுவதாகவும் உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. இன்றைக்கும் அவ்வாறு பரவுவது தொடர்கிறது.
மேலும், தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் காற்றிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு புவியீர்ப்பு சக்தியின் மூலமாக காற்றில் நீண்ட தூரம் பரவி செல்லாமல் கொரோனா வைரஸ் பூமியில் விழுந்து விடுவதாக கருதப்பட்டது. இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் நெடு தூரம் காற்றில் பரவி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
