'நம்ம சென்னையா இது'?...'சென்னை கிளைமேட் இஸ்'...'ரொமான்டிக்னு' ஸ்டோரி போடுவாங்களே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 22, 2019 04:19 PM

தமிழகம் மட்டுமல்லாது சென்னையிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில்,கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக,வானம் மேக மூட்டத்துடன் மாறியது.அத்துடன் சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

Chennai Climate has been changed suddently

இந்த வருடம் பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வெப்பம் நிலவுவதுடன்,கடுமையான தண்ணீர் பஞ்சமும் தலை விரித்து ஆடுகிறது.அதோடு வெயில் பல இடங்களில் 100 டிகிரியை கடந்து,மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன்னியாகுமரி, நெல்லை, பெரம்பலூர், ஊட்டி ஆகிய இடங்களில் நல்ல மலாய் பெய்தது.இதனால் சற்று வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதனிடையே வழக்கத்திற்கு மாறாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வெப்பம் சற்று குறைந்து காணப்பட்டது.அத்துடன் காஞ்சிபுரத்தில் சட்டென மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது.இந்நிலையில் சென்னையில் விரைவில் மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், மழை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #RAIN #CHENNAI RAIN