VIDEO: ‘HELLO GENTLE MAN...’ வாக்குச்சாவடியில் விஜய்யை புகழ்ந்த நபர்.. அதுக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் வைரல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாக்கு செலுத்த வந்த போது நடிகர் விஜய்யை பார்த்து ஜென்டில்மேன் என்று நபர் ஒருவர் புகழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நொடிகள் ஓட்டுப் போடாமல் நின்ற நடிகர் விஜய்.. என்ன காரணம்..?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் இன்று (19.02.2022) காலை முதல் ஆளான தனது வாக்கை செலுத்தினார்.
வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு நடிகர் விஜய் கிளம்புவார் என செய்தி வெளியானதால், காலை 5 மணியில் இருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். அதன்படி இன்று காலை 7 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் விஜய் கிளம்பினார். நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வாக்கு செலுத்தச் சென்றார்.
அப்போது வாக்குச்சாவடிக்கு செல்லும் போது செய்தியாளர் ஒருவர் தடுமாறி கீழே விழ இருந்தார். உடனே அவரை பிடித்த விஜய், பார்த்து.. பார்த்து ஒன்னுமில்ல பொறுமையா வாங்க என கனிவாக முன்னே அனுப்பி வைத்தார். பின்னர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த போது, வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக எண்ணி ‘Sorry..Sorry...’ என விஜய் கூறினார். அப்போது வாக்காளர் ஒருவர் ‘Hello gentle man, so proud of you’ என விஜய்யை புகழ்ந்து கூறினார். உடனே, நன்றி சொல்லும் விதமாக அவரை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விஜய் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் நிரம்பாத ‘அதிசய’ கிணறு.. காரணத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்..!

மற்ற செய்திகள்
