BREAKING: 'நடிகர் 'விஜய்' வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...' - இளைஞர் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சாலிகிராமத்தில் அமைந்துள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாக தெரிகிறது.
செல்போனில் வந்த தகவலால் நடிகர் விஜய் வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், தொலைபேசியில் வந்த தகவல் வெறும் புரளி என்பது உறுதியானது. தொடர்ந்து தொடர்பு நபரின் தொலைபேசி எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் என்பது தெரிய வந்தது.
புவனேஷ் என்றஅந்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அந்த இளைஞர் மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்குமிதே போன்று மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
