'10 ரூபாய் துட்டுக்கு சிக்கன் பிரியாணி...' 'கடைய ஆரம்பிச்சு கொஞ்சம் நேரம் கூட ஆகல, அதுக்குள்ள...' - தெறித்து ஓடிய பிரியாணி லவ்வர்ஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் புது புது உணவகங்கள் உருவாவதுடன் திறப்பு விழா சலுகையால் அன்றே மூடவும் படுகிறது.

அதேபோல் தான் இப்போது விழுப்புரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி தருவதாக அறிவித்து கூட்டத்தை கூட்டியதால் , பிரியாணி சாப்பிட வந்தவர்களை லத்தி அடி வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அரவிந்த் என்பவர் விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை ஓரமாக செட் ஒன்றை அமைத்து அதில் புதியதாக பிரியாணி கடையை திறந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் கடையை பிரபலப்படுத்த திறப்பு விழா சலுகையாக, 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு வலியுறுத்திய முன்னெச்சரிக்கை கடைபிடிக்காமல் பிரியாணி வாங்க கடையின் முன் குவிந்ததால், அவர்கள் வந்த வாகனங்கள் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த தாலுகா போலீசார் அங்கு கூடியிருந்தவர்களுக்கு லத்தியடி வழங்கி கூட்டத்தை கலைத்தனர். அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி நோய் பரவலுக்கு வழிவகுத்ததற்காக கடையின் உரிமையாளர் அரவிந்தை கைது செய்ததோடு பிரியாணி அண்டாவையும் பறிமுதல் செய்தனர்.
கடை திறந்த அன்றே திறப்பு சலுகையால் இழுத்து பூட்டிய காவல்துறையினர் சாவியையும் எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மற்ற செய்திகள்
