VIDEO: "MR.திருமாவளவன்... காலில் உள்ளதை கழற்றுவோம்!".. பாஜக ஆர்ப்பாட்டத்தில்... கொந்தளித்த காயத்ரி ரகுராம்!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மனு தர்மத்தின் பெயரால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசிவிட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவின் மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜகவில் உள்ள நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பெண்கள் குறித்து திருமாவளவன் பேசியது வெட்கக்கேடான ஒரு கொடுமையான செயல் என்று கவுதமி கூறினார். மேடையில் பேசிய நடிகை காயத்திரி ரகுராம், நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என திருமாவளவன் கூறுவதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.
திருமாவளனுக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டதாவும் அவர் ஜெயிலுக்கு போகப்போவதாகவும் காயத்ரி கூறினார். கடந்த ஆண்டே தான் நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தபோது பயந்து அமெரிக்காவில் போய் திருமாவளவன் ஒளிந்து கொண்டார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
