BREAKING: தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இதுவரை சுமார் ஆயிரத்தி முன்னூறுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அதே போல, ஈரோடு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பி.பி. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 75 முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த நிலையில், இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #TAMILNADU #CUDDALORE #ERODE
