'ஆற்றில் ஆடைகளின்றி மிதந்த உடல்'... 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'இரக்கமின்றி கணவரே செய்த குரூரம்'... 'வாக்குமூலத்தில் சொன்ன நடுங்கவைக்கும் காரணம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே புதுப்பெண்ணை அவருடைய கணவரே கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (28). இவருக்கும் லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியை சேர்ந்த கிறிஸ்டிஹெலன்ராணி (26) என்பவருக்கும் கடந்த மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை கிறிஸ்டிஹெலன்ராணி திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரை தேடிப் பார்த்தபோது கொள்ளிடம் ஆற்று பகுதியில் அவருடைய ஆடைகள் ஆங்காங்கே கிடந்துள்ளன. மேலும் அவர் ஆற்று தண்ணீரில் ஆடைகளின்றி சடலமாக மிதந்துள்ளார். அத்துடன் அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கிறிஸ்டிஹெலன்ராணியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கிறிஸ்டிஹெலன்ராணியின் கணவர் அருள்ராஜ் முன்னுக்கு பின் முரணாகவே பதில் கூறியுள்ளார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அருள்ராஜே மனைவியை கொலை செய்துவிட்டு நகைக்காக கொலை நடந்தது போல் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் அருள்ராஜ் அளித்த அதிரவைக்கும் வாக்குமூலத்தில், "திருமணமான நாள் முதல் எங்களுக்குள் தாம்பத்ய உறவு சரிவர நடைபெறவில்லை. நான் தாம்பத்ய உறவுக்கு அழைத்தபோதெல்லாம் என் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் தாம்பத்ய உறவுக்கு அழைத்த போது மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இருப்பினும் எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடந்து முடிந்தது. பின்னர் என் மனைவியை மீண்டும் தாம்பத்ய உறவுக்கு அழைத்தபோது அவர் என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற என் மனைவியை நான் பின் தொடர்ந்து சென்று கொள்ளிடம் ஆற்று பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தேன்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக, என் மனைவி அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டதுடன், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது போல் போலீசாரை நம்ப வைக்க, அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி, உடலை நிர்வாணமாக தண்ணீரில் வீசினேன். பின்னர் வீட்டிற்கு வந்து என் மனைவியை காணவில்லை என உறவினர்களிடம் நாடகமாடினேன்" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மனைவியை கொலை செய்த அருள்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.