'உடம்புல தீயோடு வெளியே ஓடி வந்த சிறுமி...' 'பாலியல் வன்கொடுமை செய்ய முடியாததால்...' இளைஞர் செய்த வெறிச்செயல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கரில் பாலியல் வன்கொடுமை செய்வதை தடுத்த 14 வயது சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கரின் முங்கேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 14 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்க முற்பட்டுள்ளார்.
ஆனால் சிறுமி கத்தி கூச்சல் போட்டதால், சத்தத்தை அடக்க சிறுமியின் வாயை மூடியுள்ளார். ஆனால் விடாமல் அந்த சிறுமி தனது முழு பலத்தையும் உபயோகித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுமியின் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, சிறுமியை கொளுத்தி விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். மேலும் தீ கொழுந்து விட்டு எரியும் படி வலி தாங்காமல் சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்து விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமியை இந்த கொடூர நிலைக்கு ஆளாக்கியது அக்கிராமத்தை சேர்ந்த பாப்லு பாஸ்கர் என அடையாளம் காணப்பட்டார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
