'7 வயசு சிறுமியை...' 'ஆள் அரவம் இல்லாத கருவேல காட்டுக்குள்ள கொண்டு போய்...' அறந்தாங்கி அருகே நடந்த கொடூரம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்விளையாட சென்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் நாகூரான், செல்வி தம்பதிகளின் 7 வயது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இரவு 7 மணிக்கு மேலும் மகள் வீட்டிற்கு வராததால் நாகூரான் சிறுமியை தேடி வெளியே சென்றுள்ளார் ஆனால் வெளியே மகள் இல்லாததால் தன் நண்பர்களை கூட்டிக் கொண்டு சுற்றும் முற்றும் தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் சிறுமி தென்படவில்லை.
சிறுமியின் தந்தை உடனடியாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் அடுத்தநாள் புதன் மாலை 4 மணியளவில் ஆள் அரவமில்லாத அதேபகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் கொடிகள் அடர்ந்த இடத்தில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் உடலில் பல காயங்களுடன் காணப்பட்ட சிறுமியை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களை வரவழைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிரேத பரிசோதனையில் 7 வயது சிறுமி மண்டையில் அடிக்கப்பட்டுள்ளதாகவும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பாலியல் வன்கொடுமைக்கு அழைக்கப்பட்டதாவும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும் அவரது நண்பர் ஒருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் வகையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளைஞர் ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை மட்டுமல்லாது தமிழக மக்களையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
