'மனைவியை கத்திரிக்கோலால் கொலை செய்த கணவன்...' 'சாப்பாட்டு மேசையில நடந்த சண்ட...'-சருக்குன்னு எடுத்து சொருகிட்டார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் ஆத்திரமடைந்து கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாவட்டம் லூதியானாவின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள தச்சுத் தொழில் செய்யும் அவ்தார் சிங், அவரது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் 2 ஆண் பிள்ளைகள் வசித்துவந்தனர். குடிப்பழக்கம் உடைய அவ்தார் சிங் எப்போதும் குடித்துவிட்டு தன் மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தன் மனைவி மீது சந்தேகமடையும் குணமும் உடையவராக கூறப்படுகிறது. அதற்காகவே அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்றும் (29.06.2020)அவ்தார் சிங், குடித்துவிட்டு வந்தவர் தன் மனைவியிடம் உணவு பரிமாறுமாறு கூறியுள்ளார். ஆனால் ஜஸ்வீர் கவுர் பின்னுக்கு உணவு தயாராகவில்லை, சிறிது நேரம் பொறுக்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவ்தார் சிங், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியாய் தகாத வார்த்தைகளில் திட்டி, மேஜை மேல் இருந்த கத்திரிக்கோலை எடுத்து ஜஸ்வீர் கவுர் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும் அவரது கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் பல முறை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார்.
அம்மாவின் நிலையை பார்த்து, கத்தி கதறிய பிள்ளைகள் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். மேலும் அப்போது ஜஸ்வீர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர் அக்கம்பக்கத்தினர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் உயிரிழந்தார்.
தப்பியோடிய அவ்தார் சிங்கை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட சேலம் தாப்ரி காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஐபிசி பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் பேசிய சேலம் தப்ரி காவல் நிலைய எஸ்.எச்.ஓ கோபால் கிரிஷன், குற்றம் சாட்டப்பட்டவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், இதனால் அவருக்கும் அவரது மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படும், மேலும் அவர் தனது மனைவிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 'அதுமட்டுமில்லாமல் அவரது போதை தெளிந்த பின், மனைவியுடன் சேர்க்குமாறு வேண்டுவார்' என போலீஸ் அதிகாரி கூறினார்.
இதுகுறித்து கூறிய தம்பதியின் குழந்தைகள் 'உணவு பரிமாற சொல்லியதில் இருந்து தான் சண்டை தொடங்கியது. மேலும் என் தந்தை ஒரு மேஜையில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து தாயின் வயிற்றில் குத்தினார். நாங்கள் தடுக்க சென்ற போது எங்களை விலகி போகுமாறு கூறினார். இல்லையெனில் என்னையும் கொன்றுவிடுவேன் என சொன்னார்' எனக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்ததுடன், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்யும் அளவிற்கு சென்றதில் தற்போது இருபிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
