'வெறிநாய் போல கடித்து குதறிய கொடூரம்...' '7 வயது சிறுமி கொலை குறித்து...' - நடுங்க செய்யும் பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 03, 2020 10:13 AM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் அருகே ஏழு வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெறி நாய் போல கடித்து குதறி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Pudukkottai aranthangi 7yr old girl priya rape murder crime TN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஏழு வயது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 29-ம் தேதி அந்த சிறுமி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

காணாமல் போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஒன்றாம் தேதி மாலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மேலும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமி ஆடைகளின்றி சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு உறவினர்கள் போராடிவந்த நிலையில் வியாழக்கிழமை மாலை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பூ வியாபாரியை பிடித்து விசாரித்த போது நடந்த உண்மை தெரிய வந்தது..

சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் தினமும் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் மன நிலை பாதிக்கப்பட்ட தாய் மட்டும் உள்ள நிலையில் சிறுமியை சரியாக கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பூவியாபாரி ராஜா அந்த சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது..

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த அன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ராஜா, உடல் முழுவதும் வெறிபிடித்த நாய் போல கடித்து குதறியது தெரிய வந்துள்ளது..

வலி பொறுக்க முடியாமல் அலறித் துடித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த கதியைக் கொண்டு கரகரவென  கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை ஊருணியில் உள்ள செடிகளின் மறைவில் போட்டு மூடிவிட்டு தப்பியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிறுமியிடம் சிறிய அளவில் சேட்டைகள் செய்த போது இவனை ஒருவர் கூட எச்சரிக்காததால், செல்போனில் ஆபாச படங்களை பார்த்து இந்த கொடூர செயலுக்கு உந்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜா மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்க்கிடையே இந்த சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pudukkottai aranthangi 7yr old girl priya rape murder crime TN | Tamil Nadu News.