‘கொரோனா பாதித்த நோயாளிகளின் வீட்டில்...’ குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவது உண்மையா...? – விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்பு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

தமிழகத்தில் பெரிய மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும்.
தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வேண்டும்.
கொரோனோ பாதிக்க பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் அமைப்பதற்கான ஜப்பான் ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ள நிலையில் விரைவில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
