'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது. சேலம் மாநகரில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தினமும் 250 முதல் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கொரோனா பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா தடுப்பு முழு கவச உடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சேலம் அரிசிபாளையத்திலிருந்து லீ பஜார் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று காலை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு முழு கவச உடை வீசப்பட்டுக் கிடந்தது. இதனைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு புறம் இருக்கச் சாக்கடை கால்வாயில் கொரோனா முழு கவச உடையை வீசி சென்றது யார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஒரு முறை பயன்படுத்திய முக கவசங்களைக் குப்பைத்தொட்டி மற்றும் திறந்த வெளியில் வீசக் கூடாது எனவும், அதுபோன்று வீசும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுபோன்று மெத்தனமாகச் செயல்பட்டு, மற்றவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சேலம் மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
