"கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு?".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியது முதல், பாலிவுட் நடிகையான ஷிகா மல்ஹோத்ரா, தான் படித்து பட்டம்பெற்ற செவிலியர் பணிக்கு திரும்பியதுடன் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்காக பணிபுரிந்து வந்தார்.
வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் படித்து நர்ஸ் பட்டம் பெற்ற இவர், நாட்டுக்காக சேவை செய்யும் தனது முயற்சிக்கும் உங்களின் மக்களின் பேராதரவை வேண்டினார். கொரோனா வைரஸ் பிரச்சினையால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர முடிவு செய்த இவர், நர்ஸாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளதாகவும், அனைவரும் தயவு செய்து வீட்டில் இருந்து, கொரோனாவை விரட்ட முனையும் அரசுக்கு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவர் இப்படி சொல்ல காரணம் என்ன தெரியுமா? கொரோனா வார்டுகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணிபுரிந்து வந்த ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதுதான். அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். யாரும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், நோய்ப் பரவல் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.