"அவர டி20 பிளேயராவே பாக்க மாட்றாங்க... அவர் லெவல் தெரியாம"... 'ஸ்டார் பிளேயருக்காக சப்போர்ட்டுக்கு வந்த சேவாக்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று விராட் கோலியின் பெங்களூருவுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த டெல்லி அணி திடீரென அடுத்தடுத்து 4 தோல்விகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்டிங் அமைந்துள்ள நிலையில், பிரித்வி ஷா பார்மில் இல்லாததால் பிரேக் கொடுக்கப்பட்டது. அதோடு ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் பார்மில் இல்லாததும் பேட்டிங்கில் டெல்லி அணி சொதப்ப காரணமாகியுள்ளது. இதனால் பேட்டிங் ஆர்டரில் நிலைத்தன்மையை உருவாக்கும் விதமாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரஹானே சேர்க்கப்பட்டு ஹெட்மயர் நீக்கப்பட்டார்.
முன்னதாக இந்த சீசனில் கிடைத்த வாய்ப்புகளின்போது ரஹானே சரியாக ஆடாத நிலையில், மீண்டும் ரஹானேவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா 2வது ஓவரிலேயே 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும், தவானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் அஜிங்கிய ரஹானே குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், "மிகக் குறைவானவர்களே ரஹானேவை டி20 வீரராக பார்க்கிறார்கள். ரஹானே பவுண்டரி, சிக்ஸர் அடிக்கமாட்டார் எனக் கூறுகிறார்கள்.
ஆனால் ரஹானே மாதிரியான ஒரு வீரர் ஒரு முனையில் நிற்கும்போது மறுமுனையில் அடித்து ஆடலாம். பிரித்வி ஷா மற்றும் ரஹானே இருவரையும் இணைத்து ஆடும் லெவனில் ஆடவைத்த பாண்டிங்கின் முடிவு கடினமானது. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக பாண்டிங் அந்த முடிவை எடுத்துள்ளார். ரஹானே மாதிரியான அனுபவம் நிறைந்த வீரர் 3-4 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால், அடுத்த போட்டியில் சிறப்பாக கம்பேக் கொடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். 46 பந்தில் 60 ரன்கள் அடித்து அவருடைய சராசரி ரன்ரேட்டைவிட அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார்" எனப் புகழ்ந்துள்ளார்.