கொரோனா பரவலை ‘வீடியோ’ மூலம் அம்பலப்படுத்திய ‘சீன பத்திரிகையாளர்’!.. திடீரென மாயமான பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்வுஹானின் கொரோனா பரவுவதை அம்பலப்படுத்திய சீன பத்திரிக்கையாளர் 2 மாதங்களுக்கு மீண்டும் வெளியுலகத்துக்கு வந்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முதல்முதலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. அங்குள்ள ஒரு மீன் சந்தையில் வேலை பார்த்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது முதன் முதலாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து இந்த வைரஸ் அந்நாடு முழுமைக்கும் பரவியது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 3 ஆயிரத்துகும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வுஹான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வுஹானில் கொரோனா தொற்று பரவுவதை சீன பத்திரிகையாளர் லி ஜிஹுவா (Li Zehua) என்பவர் வீடியோ வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்தினார். இதனை அடுத்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டு தோன்றிய அவர், தம்மை போலீசார் பிடித்துக் கொண்டுபோய் தடுப்பு காவலில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில் வெள்ளை காரில் போலீசார் அவரை துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது. இவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
