‘முதுகெலும்பு இல்லாத ஜெல்லி, சர்வாதிகாரி, எடுப்பார் கைப்பிள்ளை, கோழை’.. ‘வாழ்த்து’ சொன்னது ஒரு குத்தமா? - பிரிட்டன் பிரதமரை ‘காது கருக திட்டிய’ முன்னாள் கேர்ள் ஃபிரண்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை அவருடைய முன்னாள் காதலி ஜெனிஃபர் அர்க்குரி கடுமையாக சாடியுள்ளார்.
அதுவும் எடுப்பார் கைப்பிள்ளை, முதுகெலும்பு இல்லாதவர், சர்வாதிகாரி என இப்படியெல்லாம் திட்டும் அளவுக்கு போரிஸ் ஜான்சன் என்ன தவறு செய்தார் என்பதுதான் இங்கே இருக்கும் ஒரே கேள்வி. அதிகாரப்பூர்வமாக அதிபர் என அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தது தான் போரிஸ் செய்த அந்த ஒரே ஒரு தவறு.
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பைடனுக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்ட போரிஸ் ஜான்சன், பைடனுடன் தொலைபேசியுடன் பேசியதாகவும், இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்துவதற்கு எதிர்நோக்கியுள்ளதாகவும், பருவநிலையை கையாளுதல், ,ஜனநாயகத்தை மேம்படுத்துதல், கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளில் சேர்ந்து செயல்பட விரும்புவதாகவும் பைடனிடம் பேசியதாக போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த வீட்டுக்கு தான் அவருடைய முன்னாள் காதலி ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். போரிஸ் ஜான்சனின் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்ட ஜெனிஃபர் அர்க்குரி, “அலெக்சாண்டர் என்னும் அவமானமே! அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே! அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் ஊடகங்களில் வெளியாகாத நிலையில், உன்னுடைய ட்வீட் உண்மையில் நீ யார் என்பதை வெளிப்படுத்துகிறது. உலகமே அதை கவனிக்கிறது.
முதுகெலும்பில்லாதவனே, வழ வழா கொழ கொழா ஜெல்லியே நீ 100% எடுப்பார் கைப்பிள்ளை என அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறார் ஜெனிஃபர். இதில் அலெக்சாண்டர் என்பது போரிஸ் ஜான்சனின் நடுப் பெயர். போரிஸ் ஜான்சன் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த நேரத்தில்தான், போரிசுக்கும் ஜெனிஃபருக்கு தவறாக உறவு இருப்பதாக பிரச்சனை வெடிக்க பின்னர் போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது இருவருக்குமிடையில் அந்தரங்கமான உறவு இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் வேறு எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியது.
ஆனால் ஜெனிஃபர் போரிஸ் ஜான்சனை திட்டியது அனைத்தையும் எழுதினால் பத்து பக்கங்களுக்கு இருக்கும். அந்த அளவுக்கு மோசமாக திட்டி இருக்கிறார். சர்வாதிகாரி, நாட்டை முடமாக்கியவர், கோழை என்றெல்லாம் படபடவென வெடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், போரிஸ் ஜான்சனை விட நிதி பொறுப்பை வகிக்கும் ரிஷி நன்றாக ஆட்சி செய்வார் என்றும் போகிறபோக்கில் கொளுத்திப் போட்டுவிட்டு போயிருக்கிறார் ஜெனிஃபர்.