கணவரை போட்டு தள்ளிட்டு.. அடிக்கடி தன்னோடு போனில் பேசுவதாக கூறி வந்த மனைவி.. 11 வருடங்கள் கழித்து தெரிய வந்துள்ள உண்மை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 08, 2022 12:35 PM

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே கணவனை கொலை செய்த மனைவி, 11 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

jayankondam wife killed her husband 11 years ago

அந்த ஊருக்கெல்லாம் பொண்ணு தரமாட்டோம்.. கிட்டத்தட்ட 50 பேரு 45 வயசாகியும் திருமணம் ஆகாம இருக்காங்க.. என்ன காரணம்?

2007-ஆம் ஆண்டு நடந்த கொலை:

அரியலூர் மாவட்டம் ஜமீன்குளத்தூர் கிராமத்தில் வாழ்ந்தவர் நாகராஜன். இவருக்கு லட்சுமி (44 வயது) என்ற மகளும், குணசேகரன் (42 வயது) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு அதேப் பகுதியை சேர்ந்த செந்தாமரை (40 வயது) என்பவருடைய கொலை வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நான்கு வருடங்கள் கழித்து கடந்த 2011 ஜனவரி 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

11 வருடங்கள் ஆகியும் உடன்பிறந்த அக்காவிடம் பேசாமல் இருந்த தம்பி:

அந்த நேரத்தில் சங்கர் மட்டும் தான் ஆஜரானார். குணசேகரன் ஆஜராகவில்லை. போலீசார் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. 11 வருடங்கள் ஆகியும் உடன்பிறந்த அக்காவிடம் பேசாமல் இருந்த காரணத்தினால் அவருக்கு சந்தேகம் வலுத்ததுஇதுகுறித்து நேற்று முன்தினம் அவருடைய அக்கா லட்சுமி, ஆண்டிமடம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில், எனது தம்பியை பல வருடங்களாக காணவில்லை. அவரது மனைவியான ஜெயந்தியிடம் கேட்டபோது கேரளாவில் வாழ்ந்து வருவதாகவும், அடிக்கடி போனில் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

jayankondam wife killed her husband 11 years ago

தெரிய வந்த உண்மை:

அதுமட்டுமல்லாமல், குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என ஊர்மக்கள் சிலர் பேசி வருகின்றனர். எனது தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் குணசேகரின் மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது அதிர வைக்கும் தகவல் வெளியானது. அதில், குணசேகரன் அடிக்கடி மது அருந்திவிட்டு சண்டையிட்டு வந்ததுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே நடந்த சண்டையில் கோவம் அடைந்த ஜெயந்தி தள்ளிவிட்டபோது தலையில் அடிபட்டு குணசேகரன் இறந்து போயுள்ளார்.

மூவர் கைது:

அவருடைய உடலை வீட்டின் அருகே புதைத்தோடு மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதைத்த இடத்திலிருந்து எலும்புகளை தோண்டி எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தி (42 வயது), அவருடைய தந்தை மகாராஜன் (75 வயது), அக்கா ஜோதி (40 வயது) ஆகியோரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்

Tags : #JAYANKONDAM #WIFE #HUSBAND #ஜெயங்கொண்டம் #கொலை #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jayankondam wife killed her husband 11 years ago | Tamil Nadu News.