'சொன்னதுல என்ன தப்பு?'.. 'காயத்ரி ரகுராம்க்கு காட்டமான பதில்.. மீண்டும் சர்ச்சையில் திருமா!'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 20, 2019 02:44 PM
புதுவையில் விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி நடத்திய சனாதன கல்விக் கொள்கைக்கு எதிரான மேடையில் நிறைவு உரையை நிகழ்த்திய திருமாவளவன், தேவாலயங்களுடன் ஒப்பிட்டு, ஆபாசமான சிலைகள் இருந்தால் அவைதான் இந்து கோவில்கள் என்று விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம் தனது எதிர்ப்புக் கருத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் இதுபற்றி டெல்லியில் இருந்து பேசிய திருமாவளவன், சாதி, மதம், இனம் கடந்து அனைத்து உழைக்கும் மக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டுடன் சனாதனக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் தான் அவ்வாறு பேசியதற்கு ஜனநாயக சக்திகள் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால் தேவாலயங்களை பற்றி பேசும்போது இயல்பாக இந்துக் கோயில்கள் பற்றிய நடைமுறை யதார்த்தத்தை, தான் பேசியதாகவும் இதனால் சனாதன சக்திகள் தங்கள் கட்சியினர உணர்ச்சிவசத்துக்கு ஆட்படுத்துகிறார்கள் என்று பேசிப்னார்.
மேலும் இப்போதே இப்படி இருக்கிறதென்றால் அம்பேத்கர் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? என்று கேள்வி எழுப்பியதோடு அண்ணா, கலைஞர் போன்றோரும் இப்படியான அவதூறுகளை சந்தித்தாகவும், பெரியார் மீது செறுப்பு, மனிதக் கழிவுகள் வீசப்பட்டதாகவும் கூறிய திருமாவளவன் அதே சமயம் தான் கூறியதை நியாயப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், தன் கட்சியினருக்கு, நாம் மோடி போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்வதால், இந்த பதர்களுக்கு பதில் சொல்ல காலத்தை விரையம் ஆக்க வேண்டாம் என்றும் தன் பேச்சினை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு அவதூறு பரப்புவதாகவும், கோயில்களில் மனித தாம்பத்ய உறவுகளை சித்தரிக்கும் சிலைகளையும் படங்களையும் இந்துக்களே தங்கள் குழந்தைகளுக்கு காண்பிப்பர்களா? ஆக, அவர்களுக்கு தான் பேசியது தவறில்லை என்பது தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.