'ஃப்ரிட்ஜை திறந்து ஃப்ரீஸர் உள்ளே இருந்த..' திருடுவதற்கு முன் திருடன் பார்த்த வேலை.. சிசிடிவி வீடியோவை யூடியூப்-ல் வெளியிட்ட வீட்டுக்காரர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 31, 2022 05:40 PM

ஆவடி: ஆவடியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் திருடிய நபரின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

thief broke into the house in Avadi and ate ice cream

ஐயோ, பார்ன் சைட்ல நம்ம வீடியோ இருக்கு டா.. பிளான் பண்ணி ஷூட் பண்ணிட்டாங்க.. பதறும் காதல் ஜோடி.. என்ன நடந்தது?

பொதுவாக இரவில் திருட வரும் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடுவதை மறந்துவிட்டு செய்யும் காரியங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. கடந்த மாதத்தில் கூட ஒரு திருடன் வீட்டில் புகுந்து கிச்சடி சமைத்த சம்பவம் வைரலாக பரவியது.

திருட்டு முயற்சி :

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சபீர். தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வரும் இவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

யூடியூப்-இல் பதிவேற்றிய வீடியோ:

இந்த சம்பவம் குறித்தான வீடியோவை சபீர் தன்னுடைய யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வீட்டுக்குள் வருகிறார். அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவை கண்ட அந்த இளைஞர் கேமராவை திரும்பி வைக்கவும் செய்துள்ளார்.

thief broke into the house in Avadi and ate ice cream

குளிர்சாதனப் பெட்டியை திறந்த திருடன்:

ஆனால் அது மீண்டும் பழைய நிலையில் சென்றுள்ளது. இதனை அறியாத அந்த திருடன் அங்கிருந்த பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறார். பின்னர் அங்கிருக்கும் குளிர்சாதன பெட்டியை திறந்து ப்ரீசருக்குள் இருக்கும் கப் ஐஸ்-ஐ எடுத்து சாப்பிட்டு கொண்டே மீண்டும் வீட்டை நோட்டமிடுகிறார். அதுமட்டுமில்லாமல், சில ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

thief broke into the house in Avadi and ate ice cream

இதற்கு முன்பாகவும் வந்த திருடன்:

இது அனைத்தும் அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்த திருடனை கண்டுபிடிக்க உதவிடுமாறு வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார். இந்த திருடன் இதற்கு முன்பும் ஒருமுறை வந்துள்ளதாகவும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லவ் பார்ட்ஸ் கிளி திருட்டு:

அப்போது, சிசிடிவி கேமராவை மேல் நோக்கி வைத்துவிட்டும்,லவ் பேர்ட்ஸ் கூண்டு கட்டப்பட்டிருந்த கம்பிகளை அவிழ்த்து விட்டும் சென்றதாகவும் கூறியுள்ளார். அதன்பின் மீண்டும் வீட்டினுள் வந்து லவ் பார்ட்ஸ் கிளியை திருடியும் சென்றுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரும் இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்

Tags : #THIEF #THIEF BROKE INTO THE HOUSE #AVADI #ஐஸ்க்ரீம் சாப்பிட்ட திருடன் #ஆவடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thief broke into the house in Avadi and ate ice cream | Tamil Nadu News.