நைட்டி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த நபர்.. உடனே பக்கத்துவீட்டுக்காரரை ‘அலெர்ட்’ பண்ணிய பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீடு ஒன்றில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நைட்டி திருடனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைட்டி அணிந்து வந்த மர்மநபர்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் தலையோலப்பறம்பை அடுத்த கீழுரில் எம்.எம்.மேத்யூ என்ற 80 வயது முதியவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகளான சோனியா மேத்யூ என்பவர் பாலா நகரில் வசித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று மேத்யூவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஒருவர் துணியால் மூடுவதை, சோனியா டிவில் பார்த்துள்ளார்.
அலெர்ட் பண்ணிய மகள்
உடனே தனது பெற்றோர் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் பிரபாத் குமார் என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். உடனடியாக இதுகுறித்து போலீஸ் எஸ்.ஐ ஜெயமோகனை தொடர்பு கொண்டு பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். அப்போது இரவு ரோந்து பணியில் மேற்கொண்டிருந்த எஸ்.ஐ ஜெயமோகன், சக காவலர் ராஜீவுடன் உடனடியாக கீழூருக்கு விரைந்துள்ளார். மேலும் வெள்ளூர் காவல் நிலையத்துக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.
தப்பிய திருடன்
இதனிடையே மேத்யூவின் வீட்டுக்கு பின் பக்கமாக சென்று திருடனை பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர். வீட்டின் 2-வது தளத்தில் இருந்த திருடன் போலீசை பார்த்ததும் அங்கிருந்து குதித்து தப்பியோடினான். ரப்பர் தோட்டங்கள், வயல்வெளி என பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று எஸ்.ஐ ஜெயமோகன், காவலர் ராஜீவ் ஆகியோர் திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இதனை அடுத்து திருடனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சித்தேட்டு புத்தன்புர பகுதியைச் சேர்ந்த பாபின்ஸ் ஜான் (32 வயது) என்பது தெரியவந்துள்ளது. இவர் நைட்டி அணிந்தவாறு திருடும் வழக்கமுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருடுவதற்காக பூட்டை உடைக்க பயன்படும் ஆயுதங்கள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. நைட்டி அணிக்கு கொள்ளையடிக்க முயன்ற நபரால அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரள நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி! எப்படி வந்துச்சு? பதறிய குடும்பம்