'இந்த' வருஷம் முழுக்க... கொரோனாவுக்கு நடுவிலும் 'சென்னைக்கு' அடித்த அதிர்ஷ்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 5-வது கட்ட ஊரடங்கு இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானாலும், அதனால் பல்வேறு நன்மைகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில் சென்னையில் தற்போது தண்ணீர் லாரி புக் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறதாம். முன்பு சராசரியாக 2 ஆயிரத்து 500 லாரி தண்ணீர் நடைகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுப்பார்கள். ஆனால் தற்போது 1,200 நடைகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல மால்கள், மிகப்பெரிய ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டதால் குடிநீர் தேவை பெருமளவு குறைந்து இருக்கிறதாம்.
மேலும் இந்த ஆண்டு பருவமழையும் ஓரளவு கைகொடுத்து இருப்பதால், ஆண்டு முழுவதும் சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது. அது மட்டுமின்றி நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறதாம். அதனால் இந்த ஆண்டும் காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு அலைய வேண்டுமோ? என்ற கவலை பொதுமக்களுக்கு தேவையில்லை. தற்போது கையிருக்கும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநில அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் மூலம் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

மற்ற செய்திகள்
