தமிழகத்தில் கொரோனா ‘டெஸ்ட்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன..? வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தியாவில் 38,37,207 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு: இதுவரை 4,91,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 22,333 பேருக்கு பாசிட்டீவ் என்றும், 4,68,940 பேருக்கு நெகட்டீவ் என்றும் முடிவுகள் வந்துள்ளன. 689 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இதுவரை 12,757 பேர் குணமடைந்துள்ளனர். 173 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா: இதுவரை 4,62,176 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 67,655 பேருக்கு கொரோனா பாசிட்டீவ் என்று வந்துள்ளது. 29, 329 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,286 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம்: 3,72,748 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3,69,177 பேருக்கு நெகட்டீவ் என வந்துள்ளது. 2,332 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா: 2,93,575 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2,86,245 பேருக்கு நெகட்டீவ் என்றும் 3,221 பேருக்கு பாசிட்டீவ் என்றும் முடிவுகள் வந்துள்ளன. இதுவரை 1,218 பேர் குணமடைந்துள்ளனர். 51 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
கேரளா: இதுவரை 65,002 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 64,093 பேருக்கு நெகட்டீவ் என்றும், 1,270 பேருக்கு பாசிட்டீவ் என்றும் முடிவுகள் வந்துள்ளன. 590 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 10 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.